போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று கார் டிரைவர்களுக்கு துணை கமிஷனர் அறிவுறுத்தல்.
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் சார்பில், அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னல் பகுதியில் உள்ள போலீஸ் சமுதாய கூடத்தில் நேற்று டிரைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கால்டேக்ஸி, மேக்சி கேப் டிரைவர்கள், ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஓட்டும் டிரைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
வாடகை வாகன டிரைவர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது. உரிய சீருடை அணிவதுடன், ஓட்டுனர் உரிமத்துடன், சீட்பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும். சிறுவர், சிறுமிகளுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதிக்ககூடாது. அவ்வாறு சிறுவர், சிறுமிகள் வாகனங்களை ஓட்டினால் அந்த வாகனங்களை கொடுக்கும் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைகவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.