பரமக்குடிக்கு வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள்
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடிக்கு வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடிக்கு வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழித்தடங்கள்
விருதுநகர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பரமக்குடி செல்லும் வாகனங்கள் கீழ்க்கண்ட அனுமதிக்கப்பட்ட சாலை வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
விருதுநகர் பகுதியில் இருந்து செல்லும் வாகனங்கள் அல்லம்பட்டி சோதனை சாவடி வழியாக அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி மண்டப சாலை சோதனை சாவடி வழியாக செல்ல வேண்டும். சிவகாசியில் இருந்து வரும் வாகனங்கள் திருத்தங்கல் சோதனை சாவடி ஆமத்தூர், விருதுநகர் எம்.ஜி.ஆர். சாலை வழியாக அருப்புக்கோட்டை சென்று மண்டப சாலை சோதனை சாவடி வழியாக செல்ல வேண்டும்.
ராஜபாளையம்
அருப்புக்கோட்டையில் இருந்து செல்லும் வாகனங்கள் பாம்பே மெடிக்கல் நாடார் சிவன் கோவில் விலக்கு, தேவாங்கர் கல்லூரி ரோடு, காந்தி நகர் விலக்கு வழியாக திருச்சுழி சென்று மண்டபசாலை சோதனை சாவடி வழியாக செல்ல வேண்டும்.
ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி வாகனங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர், அழகாபுரி, விருதுநகர் எம்.ஜி.ஆர். சிலை வந்து அருப்புக்கோட்டை வழியாக மண்டபசாலை சோதனை சாவடி சென்று செல்ல வேண்டும். சாத்தூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சாத்தூர் ஆர்.ஆர். நகர் விருதுநகர் எம்.ஜி.ஆர். சிலை வந்து மண்டபசாலை சோதனை சாவடி வழியாக செல்ல வேண்டும்.
தென் மாவட்டங்கள்
திருச்சுழி வாகனங்கள் குலசேகரநல்லூர், நரிக்குடி வழியாக மண்டபசாலை சோதனை சாவடி வழியாக செல்ல வேண்டும். பரளச்சியில் இருந்து வரும் வாகனங்கள் எம்.ரெட்டிபட்டி வழியாக திருச்சுழி, நரிக்குடி மண்டப சாலை சோதனை சாவடி வழியாக செல்ல வேண்டும். நரிக்குடி ஏ.முக்குளம், வீரசோழன், கட்டனூர் ஆகிய பகுதிகளில் உள்ள வாகனங்கள் மண்டபசாலை சோதனை சாவடி வழியாக செல்ல வேண்டும்.
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து பரமக்குடி செல்லும் வாகனங்கள் சாத்தூர் ஆர்.ஆர். நகர், விருதுநகர் எம்.ஜி.ஆர். சாலை வழியாக மண்டபசாலை சோதனை சாவடி வழியாக செல்ல வேண்டும். தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அழகாபுரி வழியாக விருதுநகர் வந்து மண்டபசாலை வழியாக செல்ல வேண்டும்.
வாகன அனுமதி சீட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் பந்தல்குடி சோதனை சாவடி வழியாக அருப்புக்கோட்டை, காந்திநகர், நரிக்குடி வழியாக செல்ல வேண்டும்.
பரமக்குடி செல்லும் வாகனங்கள் அனைத்தும் உரிய அனுமதி பெற்று முழுமையான தணிக்கைக்கு பின்பு வாகன அனுமதி சீட்டை வாகனத்தில் ஒட்ட வேண்டும். மேலும் இருசக்கர வாகனம் மற்றும் வாடகை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.