வெக்காளியம்மன் கோவில் திருவிழா

கந்திலி அருகே வெக்காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
கந்திலி ஒன்றியம் கரக்கப்பட்டி கிராமத்தில் 135 அடி உயர வெக்காளியம்மன் சிலை நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இங்கு அமாவாசை தினத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கந்திலி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.கே.டி. அசோக்குமார் கலந்துகொண்டார். அவருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவரும், ஒன்றிய ஒன்றிய துணை செயலாளர் பி.பிரபுவும் சேர்ந்து சொந்த செலவில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்கள்.அவைத்தலைவர் துரைசாமி, சதீஷ், அன்சர் உஸ்மான், ஜெயராமன், அனீஸ், மனோகரன், வசந்த் அப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






