வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

வேளாங்கண்ணி,
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி(தி்ங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி கொடியேற்றம் மிக எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு வழக்கம்போல் பக்தர்கள் பங்கேற்புடன் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விழா முன்னேற்பாடுகளை நாகை மாவட்ட நிர்வாகம், ஆலய நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






