வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றம்
குன்னூர் அருகே வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குன்னூர்
குன்னூர் அருகே பாய்ஸ் கம்பெனி பகுதியில் ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்னை உருவ கொடி ஆலய வளாகத்தில் பவனியாக கொண்டு வரப்பட்டது. பின்னர் நீலகிரி மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டோபர் லாரன்ஸ், மறை பணி நிலைய இயக்குனர் பிராங்க்லின் ஆகியோர் கொடியேற்றினர். தொடர்ந்து ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. நீலகிரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த பங்கு தந்தைகள் கலந்துகொண்டு திருப்பலியை நிறைவேற்றினர். இதில் ஏராளமானோர் கலந்துகெர்ணடனர். திருவிழாவையொட்டி தினமும் நவநாள், திருப்பலி, மறையுரை நடைபெற உள்ளது. வருகிற செப்டம்பர் 9-ந் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆரோக்கியராஜ், உதவி பங்கு தந்தை அபிஷேக் ரிசோரியா மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.