குமாரகோவில் வேளிமலை முருகன் தேர் திருவிழா: அமைச்சர்கள் தேர் வடம்பிடிக்க எதிர்ப்பு - 63 பேர் கைது


குமாரகோவில் வேளிமலை முருகன் தேர் திருவிழா:  அமைச்சர்கள் தேர் வடம்பிடிக்க எதிர்ப்பு - 63 பேர் கைது
x

குமாரகோவில் வேளிமலை முருகன் தேர் திருவிழாவின் போது அமைச்சர்கள் தேர் வடம்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்த 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி


குமரி மாவட்டத்தில் பிரசிதிபெற்ற குமாரகோவில், வேளிமலை முருகன் கோவில் வைகாசி விஷாக திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்துவருகிறது.

விழாவின் 9-ம் நாளான இன்று தேர்திருவிழா நடந்தது. இதில் தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அமைச்சர்கள் தேர் தேர் வடம்பிடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் தர்மராஜ், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மிசா சோமன் உட்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story