வேலூர் விமான நிலைய பணிகள் 80 சதவீதம் நிறைவு


வேலூர் விமான நிலைய பணிகள் 80 சதவீதம் நிறைவு
x

வேலூர் விமான நிலைய பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர்

வேலூர் விமான நிலைய பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

விமான நிலைய பணிகள்

வேலூர் அருகே உள்ள அப்துல்லாபுரத்தில் விமான நிலைய பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கூடுதல் நிலம் தேவைப்படுவதால் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் மந்த நிலையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் விமான நிலைய பணிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கதிர்ஆனந்த் எம்.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ.,ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது விமான நிலைய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதுகுறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியதாவது:-

வேலூரில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இதில் தனியார் நிலங்கள் சுமார் 11 ஏக்கர் நிலம் ஓடுதளத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ளது. அவைகளை அதிகாரிகளை கொண்டு இனம் கண்டறிந்து அளவீடு செய்ய உத்தரவிட்டுள்ளோம்.

விமான நிலையத்தினுள் உள்பகுதியில் உள்ள மின் கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க மின்வாரியத்திடம் கூறியுள்ளோம். சுடுகாடு ஒன்றும் அதனுள் வருகிறது. அதற்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து சுடுகாடு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

80 சதவீதம் நிறைவு

விமான நிலைய விரிவாக்க பணிகள் தற்போது வரை 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. மீதமுள்ள பணிகளை ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளோம்.

வருகிற 6-ந் தேதி நடக்கும் விமான நிலைய விரிவாக்கம் குறித்த கூட்டத்தில் கையகப்படுத்தப்பட உள்ள நிலம் குறித்து எடுத்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story