வேலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


வேலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி வேலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெறுவதை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் வேலூர் மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கி பேசினார். புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் முன்னிலை வகித்து பேசினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க. நிர்வாகிகள் கண்டன கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ராமு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சூரியகலா, லோகநாதன், மாநகர் மாவட்ட துணை இணைச் செயலாளர் சுகன்யா தாஸ், துணை செயலாளர் ஜெயபிரகாசம், பொதுக்குழு உறுப்பினர் குட்டிலட்சுமி சிவாஜி, ஒன்றிய செயலாளர்கள் எம்.ராகவன், கே.எஸ். சுபாஷ், பகுதி செயலாளர்கள் நாராயணன், குப்புசாமி, ஏ.ஜி.பாண்டியன், பிறஅணி மாவட்ட செயலாளர்கள் அமர்நாத், எஸ்.பி.ராகேஷ், ஆர்.சுந்தரராஜி, எம்.ஏ.ராஜா, பாலச்சந்தர், வி.எல்.ராஜன், வட்ட செயலாளர் சி.கே.ஜி. விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story