மதுக்கூடமாக மாறி வரும் வேலூர் பழைய, புதிய பஸ் நிலையங்கள்


மதுக்கூடமாக மாறி வரும் வேலூர் பழைய, புதிய பஸ் நிலையங்கள்
x

வேலூர் புதிய மற்றும் பழைய பஸ்நிலையங்கள் மதுக்கூடமாக மாறிவருகிறது.

வேலூர்

மதுக்கூடமாக

வேலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் இரு பஸ்நிலையங்களும் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஏராளமான மாணவ- மாணவிகளும் பஸ் நிலையத்தில் காத்திருந்து பஸ்களில் ஏறிச்செல்கின்றனர்.

இந்த இரு பஸ் நிலையங்கள் அருகேயும் டாஸ்மாக் கடைகள் உள்ளது. மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி அங்கேயே குடிக்கும் நிலை உள்ளது. சிலர் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு பஸ் நிலையத்துக்கு சென்று, பயணிகளுக்கான இருக்கையில் அமர்ந்து மதுகுடிக்கின்றனர். இதனால் இரு பஸ் நிலையமும் மது குடிக்கும் மதுக்கூடமாக மாறி வருகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

மதுகுடித்துவிட்டு அந்த பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்துவிட்டு செல்கின்றனர். மேலும் அவர்கள் சில நேரங்களில் ஆடைகள் விலகி சுயநினைவின்றி அங்கேயே படுத்து தூங்குகின்றனர். இதனால் மாணவிகள், பெண்கள் பலர் சிரமப்படுகின்றனர். அவர்கள் முகம் சுழிக்கும் வண்ணம் மதுப்பிரியர்கள் நடந்து கொள்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story