வேம்படி சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா

வேம்படி சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை அருகே உள்ள கீழதென்கலம் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வேம்படி சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நேற்று நடந்தது. இதையொட்டி மதியம் சிவனணைந்த பெருமாளுக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலையில் வேம்படி சுடலை ஆண்டவருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நள்ளிரவில் வேம்படி சுடலை ஆண்டவர், பேச்சியம்மன், பிரம்மசக்தி அம்மன், தூண்டில் மாடசாமி, முண்டசாமி, புதியவன் சாமி, மாடத்தி அம்மன், பலவேசக்காரன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், படப்பு பூஜையும் சாமக்கொடையும் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story






