வெம்பக்கோட்டை யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம்


வெம்பக்கோட்டை யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம்
x

வெம்பக்கோட்டை யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் கணேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வெம்பக்கோட்டை அருகே உள்ள இரவார்பட்டியில் இருந்து அச்சங்குளம் செல்லும் வழியில் தரைப்பாலம் வைப்பாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முற்றிலும் சேதமடைந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தரைப்பாலம் இல்லாததால் அதனைச்சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் உடனடியாக சேதமடைந்த தரைப்பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய தரைப்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story