வேங்கைவயல் விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் மே 6-ம் தேதி விசாரணையை தொடங்குகிறது


வேங்கைவயல் விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் மே 6-ம் தேதி விசாரணையை தொடங்குகிறது
x

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்ட நிலையில் யாரும் கைது செய்யப்படவில்லை. குடிநீர் பகுப்பாய்வு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். சம்பவம் குறித்து விசாரித்து இரு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஒருநபர் ஆணையத்துக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில், சென்னை ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அடுத்த வாரம் இவ்விவகாரம் குறித்த விசாரணையில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வரும் 6-ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி சத்ய நாராயணன் புதுக்கோட்டை செல்லவுள்ளார். ஒரு நபர் விசாரணைக்காக அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாக முடுக்கிவிட்டுள்ளது.





Next Story