வேங்கடேசப்பெருமாள் கோவிலில்ஆண்டு விழா


வேங்கடேசப்பெருமாள் கோவிலில்ஆண்டு விழா
x
தினத்தந்தி 21 Jun 2023 10:21 PM IST (Updated: 22 Jun 2023 5:10 PM IST)
t-max-icont-min-icon

வேங்கடேசப்பெருமாள் கோவிலில்ஆண்டு விழா

திருப்பூர்

தளி

உடுமலை அடுத்த பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி கோவில் அமைந்து உள்ளது. வேங்கடேசப்பெருமாள் தம்பதி சகிதமாக பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி அருள் பாலிக்கும் இந்த கோவிலில் 5-ம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு விஷ்வக்சேனர், லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரிப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய கடவுளுக்கு திருமஞ்சனம் சாற்றுதல், 8.30 மணிக்கு புற்றுக்கோவிலில் இருந்து பால் குடம் புறப்படுதல, ரேணுகாதேவிக்கு திருமஞ்சனம் சாற்றுதலும் நடந்தது. மாலை 5 மணிக்கு பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் கடவுள்களுக்கு திருமஞ்சனம் சாற்றும் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு உடுமலை திருப்பதி மற்றும் எஸ்.வி. புரம் ரேணுகாதேவி பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 6.30 மணிக்கு வேங்கடாசப்பெருமாள், மூலவர், உற்சவருக்கு திருமஞ்சனம் சாற்றும் நிகழ்ச்சியும், ஹோமம் நவகலச ஸ்தாபிதமும், காலை 11.30 மணிக்கு விசேஷ அலங்கார பூஜை தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மாலை 5.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் வேங்கடேசபெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் திருப்பணி குழுவினர் உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Next Story