அருளம்பாடிவெங்கட்ராமன் கோவில் கும்பாபிஷேகம்திரளான பக்தர்கள் பங்கேற்பு
அருளம்பாடி வெங்கட்ராமன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள அருளம்பாடி முஷ்குந்தா ஆற்றங்கரையில் புதிதாக வெங்கட்ராமன்கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அதன்படி நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மாலையில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, புண்யாவரவாஜனம், கலசஅலங்காரம் நடந்து, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீகணபதி யாகம், நவக்கிரக யாகம், மகாலட்சுமி யாகம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு புண்யா வரவாஜானம், தனபூஜை, தீப பூஜை நடந்து, 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர், சந்திர பூஜை, நாடிசந்தானம், வேதிகா அர்ச்சனா நடந்து மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல், கடம் புறப்பாடு நடைபெற்று காலை 10 மணிக்கு கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள சென்னம்மாள், ஆலடியான், ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோவில் விமான கலசங்கள் மீதும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். கோவில் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.