வெங்கட்ரமணசாமி தேரோட்டம்
பாப்பாரப்பட்டி:-
பாப்பாரப்பட்டி அம்பிகேஸ்வரி ஆலயத்தில் வெங்கட்ரமணசாமி ரதசப்தமி தேர் திருவிழா நடந்தது. அங்குரார்ப்பணம், புற்று மண் எடுத்தல் ஆகியன நடந்தது. விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வெங்கட்ரமண சாமி யானை, குதிரை, ஆதிசேஷன், ஆஞ்சநேயர் வாகனத்தில் வீதி உலா நடந்தது. உற்சவமூர்த்திக்கு அபிஷேகம், திருக்கல்யாணம் நடந்தது. இரவு சாமி கருட வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. பின்னர் தேர் இடம்பெயர்தல் நடந்தது. அன்னபச்சி வாகனத்தில் அம்பிகேஸ்வரி அம்மன் வீதி உலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான வெங்கட்ரமண சாமி தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். மாலையில் சுவாமி பல்லக்கு உற்சவம் நடந்தது. பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா நடந்தது. மதியம் சாமிக்கு அன்னாபிஷேகம், அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.