வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., கிராம மக்களிடம் குறைகேட்பு
தடங்கம் ஊராட்சியில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., கிராம மக்களிடம் குறைகளை கேட்டார்.
தர்மபுரி
நல்லம்பள்ளி:"-
நல்லம்பள்ளி அருகே தடங்கம் ஊராட்சி நேதாஜிநகர் பகுதியில் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனை அறிந்த எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., நேதாஜி நகருக்கு சென்று கிராம மக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் சாலை, கழிவுநீர்கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றி தரப்படும் என்றார்.
அப்போது ஊராட்சி தலைவர் கவிதா முருகன், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. நிர்வாகிகள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணி, வெங்கடேசன், காவேரி, வார்டு உறுப்பினர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story