வெண்ணந்தூர் அருகே அனுமதியின்றி கற்கள் எடுத்த பொக்லைன் எந்திரம் பறிமுதல்

வெண்ணந்தூர் அருகே  அனுமதியின்றி கற்கள் எடுத்த பொக்லைன் எந்திரம் பறிமுதல்
x

வெண்ணந்தூர் அருகே அனுமதியின்றி கற்கள் எடுத்த பொக்லைன் எந்திரம் பறிமுதல்

நாமக்கல்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அடுத்த மின்னக்கல் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி பகுதியில் நபார்டு திட்டத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டது. அந்த நிலத்தில் கற்கள் அதிகமாக இருந்ததால் அதனை சமன் செய்வதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் கற்களை எடுக்கும் பணி நடந்தது. ஆனால் கற்களை எடுப்பதற்கு வருவாய்த் துறையிடம் அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது. இதனால் வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் உலகநாதன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று அனுமதியின்றி கற்களை எடுத்த பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story