வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பூஜை கட்டணம் உயர்வு கிடா வெட்ட 50 ரூபாய்


வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில்  25 ஆண்டுகளுக்கு பிறகு பூஜை கட்டணம் உயர்வு  கிடா வெட்ட 50 ரூபாய்
x

சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் 25 ஆண்டுகளுக்கு பின் பூஜை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கிடா வெட்ட 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது..

சேலம்

சேலம்,

முனியப்பன் கோவில்

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தினமும் சேலம் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள். இதுதவிர, அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோழி, ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

இந்த கோவிலில் இதற்கு முன்பு வாகன பூஜைக்கு ரூ.15, கிடா வெட்டுக்கு ரூ.10, கோழி அறுக்க ரூ.2.50, பெரிய பொங்கல் வைக்க ரூ.15, சிறு பொங்கலுக்கு ரூ.2.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. மேலும், விசேஷ நாட்களில் கோவிலில் வைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.

கட்டணம் உயர்வு

இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் பூஜை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி நான்கு சக்கர வாகன பூஜைக்கு ரூ.100 எனவும், இருசக்கர வாகன பூஜைக்கு ரூ.50-ம், வாகன தீபாராதனைக்கு ரூ.10-ம், பெரிய பொங்கல் வைக்க ரூ.50-ம், சிறிய பொங்கலுக்கு ரூ.30-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நடைபாதை தற்காலிக கடைகளுக்கு ரூ.30-ம், கோழி அறுக்க ரூ.30-ம், கிடா வெட்டுக்கு ரூ.50 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story