வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தென்காசி
பாவூர்சத்திரம்
பாவூர்சத்திரத்தில் வென்னிமலை முருகன் கோவில் மாசித்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 7-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது.
காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மற்றும் பாலாபிசேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story