வேப்பங்காடு முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்


வேப்பங்காடு முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 9:19 AM GMT)

வேப்பங்காடு முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே வேப்பங்காடு முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முத்தாரம்மன் கோவில்

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாய்க்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், புனித நீர் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி பூஜையுடன் முதலாம் கால யாகசாலை பூஜை நடந்தது

நேற்று முன்தினம் காலையில் வேத பாராயணத்துடன் 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 8 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. காலை 10 மணிக்கு கோ பூஜையும், காலை 11 மணியளவில் புனித நீர் அடங்கிய கும்ப கலசம் விமான தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு அம்பாள் தேரில் எழுந்தருளி திருவீதிஉலா நடைபெற்றது. விழா நாட்களில் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103-வது குரு மகா சன்னிதானம் சிவபிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள், குரு சிவச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர்கள் விஜயராஜ், (நங்கைமொழி) ஆதிலிங்கம் (லட்சுமிபுரம்), தொழில் அதிபர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா செந்தூர்பாண்டி நாடார் மற்றும் திருப்பணி குழுவினர்கள் செய்திருந்தனர்.


Next Story