வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை ஊராட்சியில் அய்யர்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ராஜீவ் காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும் என அங்கு பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பயனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் எனக்கூறி 50-க்கும் மேற்பட்டோர் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வட்டார வளர்ச்சி அதிகாரி செல்வமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story