உலக வெறிநோய் தின தடுப்பூசி முகாம்
பெதப்பம்பட்டியில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. கால்நடை சிகிச்சை வளாகத்தில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு வெறிநோய் தடுப்பூசி முகாம், கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அனைவருக்கும் ஒன்று - ஒன்றே அனைவருக்கும்" என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் குமாரவேல் கண்காட்சியை தொடங்கி வைத்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கோவைநாய்கள் நலச்சங்கத்தின் நிறுவனர் கேசிகா ஜெயபாலன் சிறப்புரையாற்றினார்.
உடுமலை கார்த்திகேய பிரபு வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் மொத்தம் 124 நாய்கள்,12 பூனைகளுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது.வெறி நோய் விழிப்புணர்வு கண்காட்சியை 74 பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியை பெதப்பம்பட்டி கால்நடை மருத்துவ வளாகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் சந்திரசேகரன், கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறையின் இணைபேராசிரியர் கிருஷ்ணகுமார், கால்நடை மருத்துவக்கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.