நாடாளுமன்ற தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி


நாடாளுமன்ற தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி
x
தினத்தந்தி 7 July 2023 7:00 PM GMT (Updated: 7 July 2023 7:01 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி

நீலகிரி

ஊட்டி

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை ஒருபுறம் தேர்தல் ஆணையமும் மற்றொருபுறம் அரசியல் கட்சிகளும் தீவிரமாக தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி நடந்தது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வாக்குப்பதிவு எந்திரம் 1501, கண்ட்ரோல் யூனிட் எனப்படும் கட்டுப்பாட்டு எந்திரம் 1124, விவிபேட் எந்திரம் 1061 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இந்த எந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் கலெக்டர் அம்ரித் முன்னிலையில் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன அதிகாரிகளால் நடைபெற்றது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, ஆர்.டி.ஓ. துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story