மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி


மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி
x

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

கரூர்

கரூர், மண்மங்கலம், புகழூர் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட திருமாநிலையூர், அரசு காலனி, ஆத்தூர், பவுத்திரம், சாலப்பாளையம் ஆகிய கிராமங்களில் நேற்று கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்பங்களை களப்பணியாளர்கள் வீடு, வீடாக நேரில் சென்று சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின்போது களப்பணியாளர்கள் மகளிர் வீடுகளுக்கு நேரில் சென்று ஆதார் எண், மின் கட்டணம், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரம், சொந்தமாக வைத்திருக்கும் வாகனங்களின் விவரம் மேலும் ஆண்டு வருமானம் தொடர்பான விவரங்களை சேகரித்து அதற்கான தனிச்செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியினை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது களப்பணியாளர்களிடம் தங்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை மனுக்களை விசாரிக்க வேண்டும் என்ற பட்டியலை தினமும் தேர்வு செய்து பணிகளை விரைவாகவும், சரியான விவரங்களையும் செயலியில் பதிவேற்றம் செய்து, பணியினை சிறப்பாக செய்திட வேண்டும் என களப்பணியாளர்களுக்கு கலெக்டர் ஆலோசனைகளை வழங்கினார்.


Related Tags :
Next Story