மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி


மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி
x

ஜோலார்பேட்டை பகுதியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியை கலெக்டர் ஆய்வுசெய்தார்.

ராணிப்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் குறித்து அந்தந்த கிராம ஊராட்சிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வருவாய் துறையினர் நேரடியாக வீடு வீடாக சென்று களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோலார்பேட்டை நகராட்சி வக்கணம்பட்டி, சந்தைகோடியூர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு செய்யும் பணிகளை கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டேரி ஊராட்சி பக்கிரிதக்கா பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது பயனாளிகளின் தொழில், மாத வருமானம், மின் கட்டணம் செலுத்தும் தொகை போன்ற விவரங்களை பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுகளின் போது திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் ஜி.பழனி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story