சோதனை முறையில் மண்புழு உரம் தயாரிப்பு


சோதனை முறையில் மண்புழு உரம் தயாரிப்பு
x
தினத்தந்தி 10 May 2023 4:15 AM IST (Updated: 10 May 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் சோதனை முறையில் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த உரம் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் சோதனை முறையில் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த உரம் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மண்புழு உரம்

ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு கும்கி யானைகள், பெண் யானைகள் உள்பட மொத்தம் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைகளின் சாணம் வீணாக செல்கிறது. எனவே, வீணாகும் கழிவுகளை கொண்டு முகாமில் மண்புழு உரம் தயாரிக்க சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

5 விதமான சோதனை முயற்சிகள் செய்யப்பட்டன. இதில் 3 விதமான முயற்சிகள் வெற்றி பெற்று உள்ளன. இதைத்தொடர்ந்து அவை வேளாண்மை துறை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆய்வு முடிவுகளை தொடர்ந்து மண்புழு உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வேளாண்மைத்துறை ஆய்வு

வனத்துறை மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் முகாமில் யானை கழிவுகள், களை செடிகள் வீணாகுகின்றன. இதை கொண்டு உயிர் உரமான மண்புழு உரம் தயாரிக்கும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 1, யானை லத்தி, 2, மொட்டானா களை செடியுடன் யானை லத்தி, 3, கரும்பு சக்கை, யானை லத்தி, யூப்போரியம் என்கிற செடி, 4, மொட்டானா செடி, கரும்பு சக்கை, யூப்போரியம் செடி, 5, யானை லத்தி, யூப்போரியம் என 5 வகையான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கரும்பு சக்கை மட்டும் சமவெளி பகுதிகளில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

இதில் 3 முறைகளில் இருந்து வெற்றிக்கரமாக உரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதில் சாம்பல் சத்து, தழைசத்து உள்ளதா என வேளாண்மை துறைக்கு ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. மேலும் எந்த முறையில் நல்ல உரம் தயாரிக்க முடியும் என்று கேட்கப்பட்டு உள்ளது. வேளாண் துறையிடம் இருந்து ஆய்வு அறிக்கை வந்ததும் முகாமில் பெரிய அளவில் தயாரித்து, விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story