வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்ததில் மகிழ்ச்சி - ஜனாதிபதி திரவுபதி முர்மு


வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்ததில் மகிழ்ச்சி - ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

மதுரை,

இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் திரவுபதி முர்மு முதல் முறையாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 2 நாள் பயணமாக மதுரைக்கு வந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என். ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதன்பின், நண்பகலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் தக்கார் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். சிவராத்திரியான இன்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகை பதிவேட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதிவு செய்தார். அப்போது, அந்த பதிவேட்டில், வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது. சக குடிமகனின் நலனுக்காகவும், நம் தேசத்தின் செழிப்பிற்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன்' என்று ஜனாதிபதி எழுதியுள்ளார். பின்னர் அந்த பதிவேட்டில் ஜனாதிபதி முர்மு தனது கையெழுத்திட்டுள்ளார்.


Next Story