கேரள மாநில முன்னாள் அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்


கேரள மாநில முன்னாள் அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்
x

கோப்புப்படம்

கேரள மாநில முன்னாள் அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

சென்னை,

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான கொடியேரி பாலகிருஷ்ணன், அவருக்கு வயது 68. உடல்நலக் குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

புற்று நோய் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். கண்ணூர் நகரைச் சேர்ந்த கொடியேரி பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 15 ஆண்டு காலம் பதவி வகித்தவர்.

அவர் மேலும் கடந்த முறை 2006 - 2011 வரை அச்சுதானந்தன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அது தவிர, 2001, 2011 காலகட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் கோடியேரி பாலகிருஷ்ணன் மிக உறுதியான கம்யூனிச கொள்கை படிப்பு உடையவர் .

கொடியேறி அருகே உள்ள மொட்டும்மல் குஞ்சுன்ணி குருப்பு - நாராயணி அம்மை தம்பதியினர் மகனாக கடந்த 1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி அன்று பிறந்தவர் கொடியேறி பாலகிருஷ்ணன். பின்னர் இவர் கண்ணூர் அருகே உள்ள கல்லரா , தலாயி துவக்கப்பள்ளியில் ஆசிரியராக தனது வாழ்வை துவங்கியவர் ஆவார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது கொண்ட பிடிப்பு காரணமாக இவர் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். தனது 17 வது வயதில் கட்சி உறுப்பினராக இணைந்து தொண்டாற்றினார்.

மறைந்த கொடியேறி பாலகிருஷ்ணன் 1980 ஆம் ஆண்டு எஸ்.ஆர். வினோதினியை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு பினிஷ் கொடியேரி, பினாய் கொடியேரி என்ற இரண்டு மகன்கள் உண்டு.

நாளை மூன்று மணி அளவில் தலைச்சேரியில் உள்ள டவுன்ஹாலில் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. பின்னர் அரசு மரியாதைகளுடன் பையம்பலத்தில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story