பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள்


பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள்
x

நெமிலி, பாணாவரம் பகுதியில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

நெமிலி

நெமிலி போலீசார் சார்பில் இன்று பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

அப்போது திமிரி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பஞ்சாட்சரம் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பணியின்போது உயிரிழந்தார். நெமிலியில் உள்ள அவரது இல்லத்தில் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி தலைமையில் வீரவணக்க நாள் மரியாதை செலுத்தினர்.

இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகேஷ், சிரஞ்சீவிலு உள்ளிட்ட போலீசார் கலந்துகொண்டனர்.

இதேபோல் தக்கோலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்த பாணாவரம் பகுதியை சார்ந்த கனகராஜ் என்பவர் மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

இவரின் உருவப்படத்திற்கு பாணாவரம் போலீசார் சார்பில் வீரவணக்க நாள் மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story