படைவீரர் கொடி நாள் வசூல் பணி தொடக்கம்


படைவீரர் கொடி நாள் வசூல் பணி தொடக்கம்
x

பெரம்பலூரில் படைவீரர் கொடி நாள் வசூல் பணி தொடங்கியது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாள் வசூல் பணி தொடங்கப்பட்டது. பெரம்பலூரில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா படைவீரர் கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2021-ம் ஆண்டிற்கான கொடி நாள் நிதி வசூல் இலக்கு ரூ.16 லட்சத்து 7 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு, அனைத்து துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு 100 சதவீதம் இலக்கை எட்டியது. நடப்பாண்டில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொடி நாள் வசூல் இலக்கு ரூ.16 லட்சத்து 97 ஆயிரம் ஆகும். முன்னதாக பெரம்பலூரில் நடந்த தேநீர் விருந்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, கண் கண்ணாடி, திருமண நிதியுதவி உள்ளிட்ட 10 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வழங்கினார்.

1 More update

Next Story