கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்


கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்
x

கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருச்சி

மணிகண்டம் ஒன்றியம், வடக்கு அரியாவூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை ஸ்ரீரங்கம் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் கணபதி பிரசாத் தலைமை தாங்கினார். முகாமை அறியாவூர் ஊராட்சி மன்ற தலைவர் கஜப்பிரியா மணிகண்டன் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் சையது முஸ்தபா தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கான சிகிச்சை மற்றும் பரிசோதனை பணிகளை செய்தனர். முகாமிற்கு கொண்டுவரப்பட்ட சிறந்த 3 கிடேரி கன்றுளுக்கும், பராமரிப்பு மேலாண்மைக்காக 3 கால்நடை வளர்ப்போருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story