கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சூளாங்குறிச்சி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

கால்நடை பராமரிப்புதுறை சார்பில் ரிஷிவந்தியம் ஒன்றியம் சூளாங்குறிச்சி ஆவின் பால் சேகரிப்பு நிலையத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதை ஊராட்சிமன்ற தலைவர் கோமதிசுரேஷ் தொடங்கி வைத்தார். முகாமில் 800-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வேளானந்தல் கால்நடை உதவி மருத்துவர் நவநீதம் மற்றும் கால்நடை பராமரிப்பு அலுவலர்கள் நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம், காளைகளுக்கு ஆண்மை நீக்கம், தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், சினை ஊசி உட்பட கால்நடைகளுக்கு பல்வேறு வகையான சிகிச்சை அளித்தனர். மேலும் சிறந்த கறவை மாடு வளர்த்த பயனாளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.


Next Story