கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

நாங்குநேரி யூனியன் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் சங்கனாங்குளம் பஞ்சாயத்து சிவந்தியாபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நெல்லை ஆவின் சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் எஸ்.சின்னத்தம்பி தொடங்கி வைத்தார். ஆவின் பொது மேலாளர் (பால் உற்பத்தி) டாக்டர் சரவணமுத்து, டாக்டர் பிரவீன், வள்ளியூர் பால் சேகரிப்புகுழு தலைவர் கோவிந்தராஜ், விரிவாக்க அலுவலர் பொன் விக்சன், கூட்டுறவு சங்கத்தலைவர் இசக்கிமுத்து, பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜம்மாள் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் நம்பி நன்றி கூறினார்.


Next Story