கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

செந்துறை அருகே கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

அரியலூர்

செந்துறை ஒன்றியம், நக்கம்பாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பால் உற்பத்தி கருத்தாங்கினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இம்முகாமில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கால்நடை பராமரிப்பு கடன் 21 பேருக்கு ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டிலும், பயிர் கடன் 124 பேருக்கு ரூ.94.58 லட்சம் மதிப்பீட்டிலும், மகளிர் சுய உதவிக்குழு கடன் 5 குழுக்கள் (72 நபர்கள்) ரூ.33.12 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 217 பேருக்கு ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் சார்பில் சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த பால் கொள்முதல் பணியாளர்கள், இலவச தீவன பயிர் விதைகள் உள்ளிட்ட ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 79 பேருக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 296 பேருக்கு ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டு சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

இம்முகாமில் மகளிர் திட்ட இயக்குனர் முருகண்ணன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர், கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் தீபாசங்கரி, செந்துறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் கொளஞ்சிநாதன், ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்மணி பரமசிவம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story