கூடலூர் அருகே காட்டு யானையை பிடிக்க 2-வது கட்டமாக கால்நடை மருத்துவக் குழுவினர் ஆய்வு


கூடலூர் அருகே காட்டு யானையை பிடிக்க 2-வது கட்டமாக கால்நடை மருத்துவக் குழுவினர் ஆய்வு
x

கூடலூர் அருகே காட்டு யானையை பிடிக்க 2 -வது கட்டமாக கால்நடை மருத்துவ குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே காட்டு யானையை பிடிக்க 2 -வது கட்டமாக கால்நடை மருத்துவ குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

8-வது நாளாக கண்காணிப்பு

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையில் கடந்த மாதம் 26-ந் தேதி காலையில் ஆனந்த குமார் என்பவரை காட்டு யானை தாக்கி கொன்றது.தொடர்ந்து காட்டுயானை அப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 8 நாட்களாக கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் காட்டு யானை முகாமிட்டுள்ள பகுதியில் ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.

கால்நடை மருத்துவக் குழுவினர் ஆய்வு

இதனிடையே காட்டு யானை மீது மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வசதியாக உள்ள இடங்களை வனத்துறையினர் தேர்வு செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுமலை கால்நடை மருத்துவக் குழுவினர் ஆரோட்டுப்பாறைக்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து 2-வது கட்டமாக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வந்து போதிய இடவசதி உள்ள இடங்களில் காட்டு யானையை விரட்டி மயக்க ஊசி செலுத்துவது குறித்து வனத்துறையினருடன் ஆய்வு செய்தனர்.

இது குறித்து கால்நடை மருத்துவக் குழுவினர் தரப்பில் கூறும்போது, ஓ வேலி பேரூராட்சி பள்ளத்தாக்குகள் அதிகம் கொண்ட பகுதி. காட்டு யானை மீது மயக்க ஊசி செலுத்திய உடன் சற்று தொலை தூரம் ஓடி மயக்கம் அடையும். பள்ளத்தாக்கு பகுதியில் சென்று மயக்க நிலையை அடைந்து விட்டால் அதை பிடிப்பது மிக கடினம். இதனால் நன்கு இடவசதி உள்ள சம தளம் கொண்ட பகுதிக்கு காட்டு யானையை கும்கி யானைகள் உதவியுடன் அழைத்து சென்று பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story