கால்நடை சிகிச்சை முகாம்
கனியாமூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த கனியாமூரில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், சின்னசேலம் ஆவின் பால் குளிரூட்டு நிலையம் சார்பில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஆவின் கால்நடை தலைமை மருத்துவர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் பாபு வரவேற்றார். முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், மலட்டுத்தன்மை போக்குதல், கருமுட்டை வளர்த்தலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு பால் கேன்கள் ஊக்க பரிசாக வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை இறப்பை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், துணை தலைவர் சந்திரமோகன், கால்நடை மருத்துவர்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.