கால்நடை சிகிச்சை முகாம்
கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.
கரூர்
வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பாக நன்செய்புகழூர், தவிட்டுப்பாளையம் பகுதியில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முரளிதரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சரவணக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வேலாயுதம்பாளையம், நொய்யல் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டனர். முகாமில் 242 பசுக்கள், 957 ஆடுகள், 658 கோழிகளுக்கும், கன்றுக்குட்டிகளுக்கும் தடுப்பூசி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த கன்றுகளுக்கான பரிசுகளும், விவசாயிகளுக்கு சிறந்த மேலாண்மை விருதுகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story