தா.பழூரில் கால்நடை சிகிச்சை முகாம்


தா.பழூரில் கால்நடை சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:46 AM IST (Updated: 9 Jan 2023 12:25 PM IST)
t-max-icont-min-icon

தா.பழூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உடையார்பாளையம் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ரிச்சர்ட்ராஜ் தலைமை தாங்கினார். முகாமில் 300 பசுக்களுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசியும், 520 ஆடுகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சையும், 10 பசுக்களுக்கு செயற்கை கருவூட்டலும், 25 பசுக்களுக்கு சினை பரிசோதனையும் செய்யப்பட்டது. 200 கோழிகளுக்கு வெள்ளை கழிசல் நோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. கன்றுகளை சிறப்பாக பராமரித்து வளர்த்த 6 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

முகாமில் கூத்தங்குடி, பாலசுந்தரபுரம், தாதம்பேட்டை உள்ளிட்ட குக்கிராமங்களில் உள்ள விவசாயிகளின் கால்நடைகள் பயனடைந்தன.


Next Story