தீப்பிடித்து எரிந்த கியாஸ் வேன்


தீப்பிடித்து எரிந்த கியாஸ் வேன்
x
திருப்பூர்


உடுமலையில் இருந்து ஆலம்பாளையம் கிராமத்திற்கு கியாஸ் சிலிண்டர்களுடன் வேன் சென்று கொண்டு இருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக வேனின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.அதைத் தொடர்ந்து சுதாரித்த டிரைவர் உடனடியாக வேனை நிறுத்தினார். பின்னர் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிலிண்டர் வேனில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இந்த வேனில் தீ பற்றிய உடன் எரிவாயு நிரம்பியிருந்த சிலிண்டர்கள் பணியாளர்களால் உடனடியாக இறக்கப்பட்டது.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் வாகனம் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடாக மாறியது.இது குறித்து அமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.சிலிண்டர்கள் உடனடியாக இறக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story