'துணைவேந்தர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடாது' - உயர்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்


துணைவேந்தர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடாது - உயர்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்
x

துணைவேந்தர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடாது என்று உயர்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கும், 13 பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி, பிற துறைகளின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், துணைவேந்தர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடாது என்று துணைவேந்தர்கள் மாநாட்டில் உயர்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கவர்னர் மாளிகையின் உத்தரவுகளை, அரசிடம் கலந்தாலோசிக்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் கவர்னர் மாளிகையில் இருந்து வரும் உத்தரவுகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் அரசின் ஆலோசனையைப் பெறாமல் கவர்னர் மாளிகை உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் யுஜிசி, எ.ஐ.சி.டி.இ-யின் உத்தரவுகளை மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story