தமிழகத்தில் தனது ஆசிரியரை சந்தித்த மலேசியாவின் சர்வா மாநில துணை முதல்வர்


தமிழகத்தில் தனது ஆசிரியரை சந்தித்த மலேசியாவின் சர்வா மாநில துணை முதல்வர்
x

45 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தனது ஆசிரியரை சந்தித்த மலேசியாவின் சர்வா மாநில துணை முதல்வர், தனது ஆசிரியரிடம் கண்ணீர் மல்க குடும்பத்துடன் ஆசி பெற்றார்.

தஞ்சாவூர்

பாபநாசம்;

45 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தனது ஆசிரியரை சந்தித்த மலேசியாவின் சர்வா மாநில துணை முதல்வர், தனது ஆசிரியரிடம் கண்ணீர் மல்க குடும்பத்துடன் ஆசி பெற்றார்.

மலேசியாவில் ஆசிரியர் பணி

தஞ்சை மாவட்டம். பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி, கீழ தெருவை சேர்ந்தவர் அப்துல்லத்தீப்(வயது89). இவர் மலேசியாவில் கடந்த 55 ஆண்டுகளாக, மலேயா மற்றும் அரபி பாடங்களை கற்பிக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரிடம் மலேசியாவில் உள்ள சா்வா மாநில துணை முதல்வரான ஆவான் டெங்கா சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு படித்தார்.இந்தநிலையில் ஆவான் டெங்கா நேற்று தனது குடும்பத்துடன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரிக்கு வந்தார். அங்கு தனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர் அப்துல் லத்தீப்பின் வீட்டுக்கு ெசன்றாா். அவரை ஆசிரியர் அப்துல்லத்தீப்பின் குடும்பத்தினர் வரவேற்றனர். பின்னர், வயோதிகம் காரணமாக அறையிலிருந்த ஆசிரியர் அப்துல்லத்தீப்பை, ஆவான் டெங்கா கட்டிப்பிடித்து உடல் நலம் விசாரித்தார்.

ஆசி பெற்றார்

தொடர்ந்து தனது பதவி பற்றியும் குடும்பத்தினர் குறித்தும் ஆவான் டெங்கா தனது ஆசிரியர் அப்துல்லத்தீப்பிடம் கூறி தனது குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்து ஆசிரியரிடம் கண்ணீர் மல்க ஆசி பெற்றார். பின்னர், மலேசியாவின் சர்வா மாநில துணை முதல்வர் ஆவான் டெங்கா நிருபர்களிடம் கூறியதாவது:-மலேசியாவின் சாரவக் பகுதியில் எனக்கு பள்ளி ஆசிரியராக அப்துல் லத்தீப் இருந்தார். அவரை 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்துல்லத்தீப் மிகவும் சிறப்பான ஆசிரியராக பணியாற்றினார். இந்த வாய்ப்பை எனக்கு கடவுள் கொடுத்த வரமாக பார்க்கிறேன். அவர் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினாா்.


Next Story