மாதனூர் ஒன்றிய குழு கூட்டத்தில் துணைத் தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு


மாதனூர் ஒன்றிய குழு கூட்டத்தில் துணைத் தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

மாதனூர் ஒன்றிய குழு கூட்டத்தில் துணை தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

மாதனூர் ஒன்றிய குழு கூட்டத்தில் துணை தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஆம்பூரை் அடுத்த மாதனூரில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் அதன் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நேற்று மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. துணை தலைவர் சாந்தி சீனிவாசன் முன்னிலை வகித்தார். பெரியாங்குப்பம் பகுதி தி.மு.க. கவுன்சிலர் ரவிக்குமார், நாற்காலிகள் வாங்க டெண்டர் விடப்பட்டு மூன்று மாதங்களாகியும் இன்று வரை எங்களுக்கு உட்கார நாற்காலி கூட வாங்கி தரவில்லை என்றும், எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் டெண்டர் விடுகிறார் என்றும் தலைவர் மீது குற்றச்சாட்டுகளை கூறினார்.

அதன்பின் அவர் திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியை தூக்கி வீசி விட்டு கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளி நடப்பு செய்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஒன்றிய குழு துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், தி.மு.க. கவுன்சிலர்கள் தீபா, மஞ்சுளா, அப்ரின், திருக்குமரன், சாவித்திரி, செந்தில் குமார், காயத்திரி, ராஜேந்திரன், முத்து மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, மகாதேவன், சம்பங்கி, மனோகரன், இந்துமதி உள்ளிட்ட 16 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டுகோஷங்களை எழுப்பினர்.

பின்னர் 7 கவுன்சிலர்களுடன் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறினார்கள். அதற்கு ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story