வெற்றி விநாயகர் கோவில் குடமுழுக்கு


வெற்றி விநாயகர் கோவில் குடமுழுக்கு
x

சிக்கல் வெற்றி விநாயகர் கோவில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை மாவட்டம், சிக்கல் ஊராட்சியில் உள்ள வெற்றி விநாயகர் கோவில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 30-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. நேற்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாகுதி நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர், சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து வெற்றி விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story