வந்தவாசியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்


வந்தவாசியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
x

வந்தவாசியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்,

திருவண்ணாமலை

வந்தவாசியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்,

வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு தெள்ளார் கிழக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருவாய்த்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெள்ளார் ஒன்றியத்துக்கு தாலுகா சத்தியவாடி கிராமத்தில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ள அரசு பொது இடத்தை மீட்டு வீடற்ற பொதுமக்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரியும், இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு ஒன்றியச் செயலர் ஏ.லட்சுமணன் தலைமை வகித்தார். நகரச் செயலர் கி.இனியவன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ரா.அன்பரசு, பி.இருதயராஜ், மீ.ஜபருல்லா, ப.பாலாஜி, த.வேலு, சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story