"விஜய் அரசியலுக்கு வருவதால் எனக்கு பாதிப்பில்லை" - சீமான்
மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்
சென்னை,
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். இவரின் செயல் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான ஒத்திகையாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது ,
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் எனக்கு பாதிப்பில்லை.நான் அண்ணன் , அவர் தம்பி.என்னிடம் இருக்கும் இளைஞர்கள் வேறு . விஜய்யிடம் இருக்கும் இளைஞர்கள் வேறு. என தெரிவித்தார்.
Related Tags :
Next Story