கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக விஜயகுமார் பொறுப்பேற்பு
கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு
கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த முத்துசாமி வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய சி.விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.
அவர், நேற்று ரேஸ்கோர்சில் உள்ள கோவை சரக அலுவலகத் துக்கு வந்தார். அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து அவர் தனது இருக்கைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு வழங்குவோம் என்றார். டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார்.
பின்னர் நெல்லை மாவட்டம் வள்ளியூர், திருவள்ளூரில் துணை கமிஷனர், காஞ்சீபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை சி.பி.சி.ஐ.டி., திருவாரூர் போன்ற இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.