விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம்
கோவையில் விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் விழா கொண்டாட்டம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள கே.ஜி. தியேட்டரில் நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது:-
சினிமாவில் நான் தொடக்க காலத்தில் 4 படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதை மாற்ற நன்றாக உழைத்தேன். அதனால் தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கி றேன்.
ஓ.டி.டி. காலக்கட்டத்தில் தியேட்டர்களை மல்டி பிளக்ஸ் சாக மாற்றியதால் இளைஞர்கள் பலர் வருகிறார்கள். இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஓ.டி.டி. குறித்து முன்கூட்டியே சொன்னேன், இப்போது வந்து இருக்கிறது.
அமெரிக்காவில் இருப்பதுபோன்று தியேட்டர்களில் உணவகம் வரப்போகிறது. புதிதாக வரக்கூடிய நடிகர்களை நான் உற்று கவனித்து வருகிறேன். என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மல்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமை யாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், கே.ஜி. குரூப் ஆப் நிறுவன தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன், கே.ஜி. சினிமாஸ் நிர்வாக இயக்குனர் சரவணபிரபு, இயக்குனர் ஸ்ரீதர் கிருஷ்ணன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் சென்பகமூர்த்தி, திரைப்பட வினியோ கஸ்தர் சங்க செயலாளர் ராஜாமன்னார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தியேட்டர் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு கமல்ஹாசன் வழங்கினார். கமல்ஹாசனுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.