புலியூர் கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா


புலியூர் கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா
x

புலியூர் கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா புலியூர் கிராமத்தில் ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆலயம் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி 20-ம் ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் திருக்கல்யாண வைபவம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.சாமி, அம்பாள் ஆலயத்தில் இருந்து மகா மண்டபத்திற்கு எழுந்தருளினர். ஆலய குருக்கள் ரமேஷ் பட்டாச்சாரியார் சுவாமியின் கையில் இருந்த தாலியை எடுத்து அம்பாளுக்கு அணிவித்ததை தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. சாமி-அம்பாள் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பட்டாச்சாரியார்களால் லட்சார்ச்சனை நடைபெற்றது. பின்னர் உறியடி திருவிழா மற்றும் சாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் புலியூர் காடுவெட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story