இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்


இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாதானம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மாதானம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடிந்து விழும் நிலையில் கட்டிடம்

கொள்ளிடம் அருகே மாதானம் ஊராட்சியில் மிகவும் பழமையான கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த அலுவலகம் மாதானம் கிராமத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டிடம் பூட்டப்பட்டு கிடக்கிறது. மேலும் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், கட்டிடத்தின் மேற் கூரையின் உள்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. இதனால் இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

அச்சம்

இந்த கட்டிடத்திற்கு 50 மீட்டர் தொலைவில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த கட்டிடம் அதிக குடியிருப்புகள் அமைந்துள்ள இடத்தில் உள்ளது. இங்கு அடிக்கடி பள்ளி மாணவர்கள் வந்து விளையாடி செல்வதும், சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இங்கு வந்து விளையாடி சென்று கொண்டிருக்கின்றனர். எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தால் உயிர்பலி ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்பு மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story