கிராம நிர்வாக அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்
ஆரணியில் கிராம நிர்வாக அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
ஆரணி
ஆரணியில் கிராம நிர்வாக அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஆரணி கிராம நிர்வாக அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் எ.ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.ஏழுமலை முன்னிலை வகித்தார்.
ஆரணி வட்ட கிளை தலைவர் ஆர்.கோபால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் என். சுரேஷ் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாதாந்திர குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும். அடிப்படை மற்றும் நில அளவை பயிற்சி நடத்த வேண்டும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பணி செய்வதை தவிர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் கணேஷ், மாவட்ட அமைப்புச் செயலாளர் மகாலிங்கம், மாவட்ட போராட்ட குழு தலைவர் ரகுராமன், மாவட்ட பத்திரிக்கை செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இணை செயலாளர்கள் டி. சீனிவாசன், பிரவீன் குமார் மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.